அடுத்த 2 வாரங்கள் மிகவும் தீர்க்கமான நாட்கள்: இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க

Ranil-Main.jpg

அடுத்த இரண்டு வாரங்கள் தமக்கு மிகவும் தீர்க்கமான நாட்களாக அமையப் போகின்றன என இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.

காணொளி ஒன்றை வெளியிட்டு உரையாற்றிய அவர், போராட்டம் நடத்தும் இளைஞர்கள் முன்வைக்கும் நிபந்தனைகளின் அடிப்படையில் அவர்களுடன் பேசத் தயாராக இருப்பதாக உறுதியளித்தார். போராட்டத் தளங்கள் மீது அடக்குமுறை மேற்கொள்ளப்படாது என்றும் அவர் குறிப்பிட்டார். இலங்கையின் பொருளாதாரம் குறித்து உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் தூதுவர்களுடன் பேசி வருவதாகவும் ரணில் தெரிவித்தார்.

scroll to top