அடகு வைத்த காரை திருப்பி தர மறுத்து தாக்குதல்: ஒருவர் கைது

ஆனையூர்மலர் நகரை சேர்ந்தவர் ஸ்ரீ புகழ் இந்திரா 40. இவருக்கு சொந்தமான காரை நாராயணபுரம் கேசவ சாமி தெருவைச் சேர்ந்த சுரேஷ் 34 என்பவரிடம் சம்பவத்தன்று ரூபாய் 2 லட்சத்திற்கு அடகு வைத்ததாக கூறப்படுகிறது. அந்த தொகையை திருப்பி செலுத்தியும் காரை திரும்ப ஒப்படைக்க மறுத்துவிட்டதாகவும்,மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து ஸ்ரீபுகழ்இந்திரா தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விஜயன் மகன் சுரேஷ் 34 மற்றும் ராம்குமார் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து சுரேசை கைது செய்தனர்.

scroll to top