அக்காவை அரிவாளால் வெட்டிய தம்பி கைது

மதுரை டிச 21 குடிபோதையில் அக்காவை அரிவாளால் வெட்டிய தம்பியை போலீசார் கைது செய்தனர் . பழைய விளாங்குடி டீச்சர்ஸ் காலனி 2-வது தெருவை சேர்ந்தவர் பழனி மனைவி நித்திலா 24 .இவரது தம்பி குமார்23. இவர் குடிபோதையில் வந்து அக்காவை அவதூறாக பேசி அரிவாளால் வெட்டிவிட்டு ஓடிவிட்டார். இந்த சம்பவம் குறித்து நித்திலா கூடல்புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அக்காவை வெட்டிய தம்பியை கைது செய்தனர்.

scroll to top