ஈச்சனாரியில் உள்ள ரத்தினம் டெக்சோன் – ஏசி யில் தங்க காதணிகளுக்கென்றே பிரத்யேகமாக ஆரம்பிக்கப்பட்ட “அகஸ்டி ஜூவல்ஸ்” என்ற ஆன்லைன் ஸ்டோரின் பிரம்மாண்ட தொடக்க விழா இன்று நடைபெற்றது.
கோவையில் 40 ஆண்டுகளுக்கும் மேல் தங்க நகை தயாரிப்பிலும் வியாபாரத்திலும் சிறந்து விளங்கும் சர்வமங்கல் ஜூவல்லர்ஸ் தான், அகஸ்டி ஜுவல்ஸ் என்ற காதணிகளுக்கான பிராண்டை ஆரம்பிக்கிறது. லாஜிமேக்ஸ் டெக்னாலஜி அகஸ்டி ஜுவல்ஸூக்கு தொழில்நுட்ப சேவை வழங்குகிறது மற்றும் 3 மாங்க்ஸ் டிஜிட்டல் நிறுவனம் டிஜிட்டல் மார்க்கெட்டிங் சேவை வழங்குகிறது.
கோவையில் தங்க நகைகளை தயாரித்து விற்பனை செய்து வரும் ஒரு நம்பகமான நிறுவனம் தான் சர்வமங்கல் ஜூவல்லர்ஸ். உலகளவில் வாடிக்கையாளர்கள் தளத்தை விரிவுபடுத்துவதற்காக அகஸ்டி ஜூவல்ஸ் என்ற காதணிகள் விற்கும் ஆன்லைன் தளத்தை தொடங்கினார்கள். அகஸ்டி ஜூவல்ஸில் பல வடிவமைப்புகளில் வித விதமான காதணிகள் உள்ளது. சிறிய இதய வடிவில், மலர்கள் வடிவில், அழகுபடுத்தப்பட்ட ஸ்டெர்லிங் மற்றும் எமோனா போன்ற பல்வேறு வகையான தங்க காதணிகள் அகஸ்டி ஜுவல்ஸில் கிடைக்கும்.
நீங்கள் இப்போது www.augustijewelz.com என்ற இணையதளத்தில் ஷாப்பிங் செய்யலாம். அகஸ்டி ஜுவல்ஸ் இணையதளத்தில் நீங்கள் காதணிகளை எளிதாக ஆர்டர் செய்யலாம்.