கோவையில் நேற்று பெய்த மழையால் சாலைகள் எங்கும் மழை நீர் தேங்கியது. மேலும், அவினாசி சாலை மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள சாலையில் மழைநீர் வடிகால் வசதி இல்லாத காரணத்தால் ஒவ்வெரு முறை மழையின் போதும் அங்கு நீர் தேங்குகிறது. இந்த நிலையில் நேற்று அவ்வழியாக சென்ற கார் ஒன்று மழை வெள்ளத்தில் மூழ்கியது. இன்னிலையில் அவினாசி சாலை மேம்பாலத்தின் கீழ் தேங்கிய 43 லட்சம் லிட்டர் மழை நீர் இன்று அகற்றப்பட்டது. இதை அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் சென்று பார்வையிட்டார்.உடன் கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா. கார்த்திக்,மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுங்கரா மற்றும் மாநகராட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்